சவுதி அரேபியாவில் ஜி.சி.சி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நுழைய தடை

சவுதி அரேபியாவில் G.C.C குடிமக்கள் மற்றும் Expatriates நுழைய தடை

ஜி.சி.சி (GCC) குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சவுதி இராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டதாக சவுதி பத்திரிகை நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. மேலும் விவரங்கள் கீழே.

ஜி.சி.சி (GCC) குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நுழைய தடை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் தடைவிதிக்கப் பட்டுள்ள ஜி.சி.சி நாடுகளில் அடங்கும். இந்த நாடுகளின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், வேறு எந்த நாட்டிற்கும் சென்று திரும்பிய பின்னர், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர், கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாதிருந்தால் மட்டுமே அவர்கள் இராஜ்ஜியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். இந்த நிபந்தனைகள் நிரூபிக்கப்படாவிட்டால் நுழைவு அனுமதி வழங்கப்படாது.

சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், கடந்த 14 நாட்களில் ஜி.சி.சி.நாடுகளுக்கு சென்றிருந்தாலோ அல்லது அங்கிருந்து இராஜ்ஜியத்திற்கு திரும்பியிருந்தாலோ அதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாக, வளைகுடா (ஜி.சி.சி) நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பின்னர், 14 நாட்களுக்கு இராஜ்ஜியத்திற்குள் நுழைவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. – அல் அரேபியா மற்றும் சவுதி பிரஸ் ஏஜென்சி, 2020

ஆதாரம்: Xpressriyadh.com

One thought on “சவுதி அரேபியாவில் G.C.C குடிமக்கள் மற்றும் Expatriates நுழைய தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *